திரிஷாவுக்கு இப்படி ஒரு திருமணமா! - கவலையில் ரசிகர்கள்
Sunday May-05 2019

சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க தொடங்கியிருப்பவர், ‘ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

திரிஷாவுக்கு பிறகு சினிமாவில் எண்ட்ரியான நடிகைகள் சிலர் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், திரிஷாவுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பதில் அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திரிஷாவின் திருமணம் நின்று போனது அனைவரும் அறிந்தது தான்.

 

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று கூறி வரும் திரிஷா, சமீபத்திய பேட்டி ஒன்றில், என் மனதுக்கு பிடித்த நபரை சந்தித்தால் உடனே திருமணம் செய்துக் கொள்வேன், என்று கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரிஷாவுக்கு வாழ்த்து கூறிய நடிகை சார்மி, ”நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இப்போது சட்டப்படி அனுமதியும் உள்ளது” என தெரிவித்தார்.

 

சார்மியின் பதிவுக்கு பதில் அளித்த திரிஷா, “நான் அப்போவே எஸ் சொல்லிவிட்டேனே” என்று தெரிவித்துள்ளார்.

 

திரிஷாவும், சார்மியும் நகைச்சுவையாக திருமணம் பற்றி பேசி வந்தாலும், இதுவே உண்மையாகவும் இருக்குமோ, என்ற சந்தேகமும் ரசிகர்கள் மனதில் தோன்றியுள்ளது.

Related News

4755

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery