Latest News :

சமுத்திரகனியுடன் இணைந்த ‘காலா’ மணிகண்டன்!
Sunday May-05 2019

அறிமுக பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கும் படத்தில் சமுத்திரக்னியும், ‘காலா’ மணிகண்டனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ‘ஏலே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் (YNot Studios) மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

 

மேலும், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.

 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ்.சசிகாந்த் கூறுகையில், ”கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களை கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிய சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அப்போது தான், சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்களை கண்டறிந்து அவற்றை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல முடியும். 'வால்வாட்சர் ஃபிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ள இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி இந்த முயற்சியில் எங்களுடன் கைகோர்க்க முன்வந்திருக்கின்றனர். ’ஏலே’ என்ற இந்த படத்தில் நாங்கள் இணைந்து பணிபுரிகிறோம்.” என்றார்.

 

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிபாசிஷ் சர்கார் கூறுகையில், “இந்த மாதிரியான நல்ல கதைகளை கண்டுபிடித்தல், அதை தாங்குதல் மற்றும் தயாரித்தல் என்ற இந்த ஒருங்கிணைந்த  மாதிரி, தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதியது. இது படைப்பாளிகளுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் உற்சாகமான தருணம்.” என்றார்.

 

Aelay

 

புஷ்கர் மற்றும் காயத்ரி கூறுகையில், “பெரிய திரையில் நாம் விரும்பும் கதைகளை கொண்டு வரும் கனவு எங்களுக்குள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தபோது ஹலிதா ஷமீம் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. எனவே, எஸ்.சசிகாந்த் இந்த மாதிரியான ஒரு யோசனையை கொண்டு வந்தபோது, நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க உடனே ஒப்புக் கொண்டோம்.” என்றனர். 

 

இயக்குநர் ஹலிதா ஷமீம், “பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய, இப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் ‘ஏலே’ படத்தை நான் இயக்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வழிக் காட்டிகள், புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் எனது கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இருப்பது மேலும் மகிழ்ச்சி. இந்த மாதிரி கதையம்சம் உள்ள திரைப்படங்களை வழங்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த்திற்கு ஒரு பெரிய நன்றி.” என்றார்.

 

நியோ ரியலிஸ்டிக் காமெடி படமாக உருவாகும் ‘ஏலே’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 3 ஆம் தேதி பழனியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News

4756

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

Recent Gallery