தமிழ் சினிமாவின் முன்னாள் காமெடி கிங்கான சந்தானமும், தற்போதைய காமெடி கிங்கான யோகி பாபுவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.
நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானாம், ஹீரோவாக அறிமுகமாகி காமெடி படங்களில் நடித்ததால் வெற்றி பெற்றார். பிறகு காமெடியை தவிர்த்துவிட்டு ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கிய சந்தானம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததோடு, தனது பல படங்களை ரிலீஸ் செய்ய முடியாமலும் தவித்தார்.
இதையடுத்து, மீண்டும் காமெடி பாதையில் பயணிக்க முடிவு எடுத்தவர், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துஎடுத்த ’தில்லுக்கு துட்டு 2’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ‘A1' என்ற புதிய படத்தில் நடித்து வரும் சந்தானம், இப்படத்திற்கு பிறகு யோகி பாபுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.
’டகால்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை விஜய் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டைடில் விரைவில் வெளியாக உள்ளது.
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...