மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படத்தில் பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க, பாக்யராஜ் முதல் முறையாக வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயபிரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ஒரு பாடலும், டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை (செப்.08) படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.
பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கருக்கு பிறகு தமிழ் சினிமாவில் துப்பறியும் படங்கள் வெளியாகத குறையை போக்கும் வகையில், உருவாகியுள்ள இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வியட்நாம் கலைஞர்களின் அதிரடியாக இந்த ஆக்ஷன் காட்சிகளை வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ள இயக்குநர் மிஷ்கின், இந்த ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே ஒரு தொகுப்பாக வெளியிட முடிவு செய்துள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...