நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்! - தேதி குறிச்சாச்சு
Monday May-06 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, எத்தனை இளம் நடிகை வந்தாலும் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடித்துக் கொண்டிருக்கிறார். கை நிறைய படங்களை வைத்துக் கொண்டிருப்பவர், காதலிலும் பிஸியாகவே இருக்கிறார்.

 

அவ்வபோது தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர், சென்னையில் ஆடம்பர குடியிருப்பு ஒன்றில் லிவிங் டூ கெதர் முறையில், விக்னேஷ் சிவனுடன் இணைந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, 34 வயதாகும் நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்த நிலையில், அவருக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவனின் குடும்பத்தாரும் திருமணம் குறித்து நயன்தாராவுக்கு நெருக்கடி கொடுத்ததால், அவர் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியானது.

 

இதையடுத்து, நயன்தாராவின் திருமண நிச்சயதர்த்தம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், நயன்தாராவின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்கு குடும்பத்தார் தேதி குறித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதன்படி, வரும் நவம்பர் மாதம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாதங்களை முடிவு செய்துவிட்ட குடும்பத்தார் சில தேதிகளை பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related News

4770

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery