புற பந்தயத்தை மையமாக வைத்து உருவாகும் ‘பைரி’
Tuesday May-07 2019

புற பந்தயம் குறித்து சில திரைப்படங்களில் கூறியிருந்தாலும், முழுக்க முழுக்க புற பந்தையத்தை மையமாக வைத்தும், புற பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் முழுமையாக பேசும் ஒரு படமாக ‘பைரி’ என்ற படம் உருவாகிறது.

 

குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில் நடந்த புறா பந்தயங்கள் பற்றி பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகிறது.

 

டி.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.துரைராஜ் தயாரிக்கும் இப்படத்தை ஜான் கிளாடி இயக்குகிறார். இவர் நாளைய இயக்குநர் சீஸன் 5 - ல் கலந்துக் கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு, அந்நிகழ்ச்சியில் ‘நெடுஞ்சாலை நாய்கள்’ என்ற குறும்படத்திற்காக சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர் ஆவார். சஞ்சீவ் உள்ளிட்ட சில இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

John Glady

 

நாளைய இயக்குநர் சீஸன் 3-ல் முதல் பரிசு வென்ற ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ உள்ளிட்ட பல குறும்படங்களை தயாரித்து, 25 க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத், இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜி சேகர், எஸ்.ஆர்.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். 

 

ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைக்க, பிரான்சிஸ் கிருபா, கவித்ரன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ஆர்.எஸ்.சதீஸ் குமார் படத்தொகுப்பு செய்ய, ராஜா ஒலிப்பதிவு செய்கிறார். சிவ கிரிஷ் நடனம் அமைக்க, விக்கி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை மாரியப்பன், விசு ஆகியோர் கவனிக்க, சக்தி சரவணன் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.

 

நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Related News

4786

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery