Latest News :

பேய் படத்தில் நடித்த சிறுமிக்காக ரூ.5 லட்சம் பொம்மைகள்!
Tuesday May-07 2019

பேய் படங்களை ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிப்பதால், கோடம்பாக்கத்தில் வாரம் ஒரு பேய் படம் வந்துவிடுகிறது. அந்த வரிசையில் ஒரு பேய் படமாக உருவாகி வருகிறது ‘கைலா’.

 

பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தானா நாயுடு நடித்துள்ளார். இவர் துபாயில் பிறந்து வளர்ந்தவர். தற்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் தானா நாயுடு, இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார். மற்றும் பாஸ்கரன் சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர் மனோகர், ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாஸ்கர் சீனுவாசன் இயக்குவதோடு தயாரிக்கவும் செய்கிறார்.

 

பரணி செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரவன் இசையமைக்க, வடிவரசு பாடல்கள் எழுதுகிறார். மோகன மகேந்திரன் கலையை நிர்மாணிக்க, எஸ்.எல்.பாலாஜி நடனம் அமைக்கிறார். ஆர்.சுப்புராஜ் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, அசோக் சார்லாஸ் எடிட்டிங் செய்கிறார்.

 

Kaila Movie

 

படம் பற்றி இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் கூறுகையில், “உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது.

 

தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக  நடிக்கிறார். அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.

 

பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய  பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.

 

இந்த  பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக படமாக்க விரும்பு, அதற்காக 5 லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை படமாக்கினோம்.” என்றார்.

 

கொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45நாட்கள்  படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 

Related News

4787

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

Recent Gallery