இந்த செப்டம்பர் மாதம் வாரத்திற்கு 5 க்கும் மேற்பட்ட படங்கள் ரிலிஸாக உள்ளது. மொத்தத்தில் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 30 திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாக கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், சில படங்கள் ரிலிஸ் தேதியை அறிவிப்பதோடு நின்று விடுவதும் உண்டு.
இப்படி அனைத்து படங்களும் இந்த செப்டம்பர் மாதத்தை குறி வைப்பதற்கு காரணம், இம்மாதம் காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுவதோடு, ஏகப்பட்ட அரசு விடுமுறைகளும் இம்மாதத்தில் இருப்பதுதான்.
அப்படிப்பட்ட இந்த செப்டம்பர் மாத பந்தயத்தில், கிருஷ்ணா நடித்துள்ள ‘வீரா’ படமும் இணைந்துள்ளது. ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் கருணாகரன், தம்பி ராமையா, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ராதரவி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜா ராமன் இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் பாடல்களுக்கு இசையமைக்க, எஸ்.என்.பிரசாத் பின்னணி இசையமைத்துள்ளார். ஆக்ஷன் பிளஸ் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதையை பாக்கியம் ஷங்கர் எழுதியிருக்கிறார்.
சலீம், ஜிகர்தண்டா, த்ரிஷா இல்லனா நயந்தரா, சேதுபதி போன்ற வெற்றி படங்களை வெளியிட்ட ஆரஞ்சு கிரியேஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் நிறுவனம் இணைந்து வெளியிடும் ‘வீரா’ செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...