‘இந்தியன் 2’ படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!
Wednesday May-08 2019

’2.0’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தினை எடுக்க இருந்த ஷங்கர், அதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கும் தயாரான நிலையில், படத்தின் பட்ஜெட் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தால் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது.

 

இதற்கிடையே, படத்தின் பட்ஜெட் மிகப்பெரியதாக இருந்ததால் படத்தை தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் திடீரென்று பின்வாங்கியது. இதையடுத்து வேறு சில நிறுவனங்களை இயக்குநர் ஷங்கர் அனுகிய போது, படத்தில் ஹீரோயினாக நடிக்க ஓகே தெரிவித்த நயன்தாராவும் விலகியதோடு, கமல்ஹாசனும் தேர்தல் களத்தில் பிஸியானார். இதனால், மற்ற நிறுவனங்களும் ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க தயங்கியது.

 

‘எந்திரன்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ தயாரிப்பது குறித்து ஷங்கருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், கமல்ஹாசன் தொடர்ந்து திமுக-வை விமர்சித்து வருவதால், அவர்களும் இறுதியில் நோ சொல்லிவிட்டார்களாம்.

 

இயக்குநர் ஷங்கரின் ஒரே நம்பிக்கையாக இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தற்போது பின் வாங்கிவிட்டதால், ’இந்தியன் 2’ படம் தயாரிப்பாளர் கிடைக்காமல் ட்ராப் ஆவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.

 

மேலும், ஷங்கர் இளைஞர்களை வைத்து காதல் கலந்த கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கும் திட்டத்திற்கும் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

4791

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery