பேரனை ஹீரோவாக்கும் சரத்குமார் பட இயக்குநர்!
Wednesday May-08 2019

சரத்குமார் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, ‘பரம்பரை’, ‘சமுத்திரம்’ போன்ற படங்களின் கதை, வசனம் எழுதியதோடு, ‘முதல் சீதனம்’, ‘சிம்மராசி’ ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் ஈரோடு செளந்தர்.

 

குடும்பக் கதைகளை செண்டிமெண்டோடு சொல்வதிலும், வசனங்கள் மூலம் கதைக்கு உயிர் கொடுப்பதிலும் தேர்ந்தவரான இயக்குநர் ஈரோடு செளந்தர், ’சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களுக்காக சிறந்த கதையாசிரியர் மற்றும் ‘சிம்மராசி’ படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசு விருது பெற்றிருக்கிறார்.

 

படம் இயக்கி பல வருடங்கள் ஆனாலும், பல வெற்றிப் படங்களின் கதை விவாதத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஈரோடு செளந்தர், தனது பேரனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.

 

‘அய்யா உள்ளேன் அய்யா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் மாணவர்களின் எதிகாலத்தை நிர்ணயிக்கும் 10 ம் வகுப்பு பள்ளி படிப்பின் முக்கியத்துவத்தையும், அதில் கவனம் செலுத்தாமல் தடம் மாறும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி கேள்விக்குறியாகிறது, என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது.

 

10 ம் வகுப்பு  பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10 ம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக  இருக்கும் என்பதால், தனது பேரன் கலிபேஷை நாயகனாக இயக்குநர் ஈரோடு செளந்தர் அறிமுகப்படுத்துகிறார். இன்னொரு எதிர் மறை நாயகனாக தனது தம்பி மகன் பால சபரீஸ்வரனையும் களம் இறக்குகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்களுடன் மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

சந்துரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மகேந்திரன் இசையமைக்கிறார். வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 4 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Related News

4792

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery