தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் பார்த்த நிகழ்ச்சி என்ற பெருமையை பிக் பாஸ் பெற்றுள்ளது. தமிழில் இரண்டு சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி பல சர்ச்சைகளை எதிர்கொண்டாலும், பெரும் வரவேற்பும் பெற்றது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது ஒளிபரப்பாகும், என்று மக்கள் ஆர்வத்துடன் இருக்க, இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகமல் உள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாவது உறுதியாகிவிட்டதாகவும், போட்டியாளர்களாக தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளான லைகா, சாந்தினி, சுதா சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அதேபோல், மூன்றாம் சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...