நடிகர் மற்றும் நடன இயக்குநராக இருந்த ராகவா லாரன்ஸை இயக்குநராக உயர்த்திய ‘முனி’ படத்தின் சீரிஸாக வெளியான காஞ்சனா மற்றும் அதன் சீரிஸ்கள், அவருக்கு புதையல் கிடைத்தது போல அமைந்துவிட்டது.
’காஞ்சனா’ முதல் சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 3’ வரை வசூலில் அதிரடி காட்ட, தற்போது ரஜினி, விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் லாரன்ஸ் இடம் பிடித்துவிட்டார்.
எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், ‘காஞ்சனா 3’ கடந்த மூன்று வாரங்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் குடும்பத்தோடு பார்ப்பதால், தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் புது படங்களுக்கு தியேட்டர் கொடுக்காமல் ‘காஞ்சனா 3’ யே ஓடட்டும், என்றும் கூறுகிறார்கள்.
‘காஞ்சனா 3’ யை தொடர்ந்து ’காஞ்சனா 4’ க்கும் ரெடியாகும் ராகவா லாரன்ஸ், அப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக அவர் ரூ.100 கோடியை பட்ஜெட்டாக ஒதுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, ‘காஞ்சனா’ படத்தை இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ், அப்படம் முடிந்த பிறகு ‘காஞ்சனா 4’ பணிகளை துவக்க இருக்கிறாராம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...