தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய், தனது சமீபத்திய படங்களில் அரசியல் குறித்து அதிகமாக பேசுவதால், தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் அவரது படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அவரது படங்கள் சர்ச்சைகள் பலவற்றை சந்தித்தாலும், மாபெரும் வெற்றியும் பெற்றுவிடுகிறது.
வெள்ளித்திரையில் மட்டும் விஜய்க்கு இத்தகைய வரவேற்பு கிடையாது. சின்னத்திரையிலும் விஜய் படங்கள் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப். அதனால் தான், விஜய் படங்களை வாங்க பல சேனல்கள் போட்டி போடுகின்றன.
இந்த நிலையில், ஒரு நாளில் ஒரு விஜய் படத்தை தான் சேனல்கல் ஒளிபரப்பும். ஆனால், ஒரு சேனல் ஒரு நாளில் பல விஜய் படங்களை ஒளிபரப்பி அதிரடி காட்ட முடிவு செய்திருக்கிறது.
ஆம், இந்த வாரம் சனிக்கிழமை ஜெயா டிவியில் விஜயின் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ‘கத்தி’, ‘மதுர’ ஆகிய நான்கு படங்கள் ஒளிபரப்பாகிறது. ஜெயா டிவியின் இந்த அதிரடிக்கு காரணம் டி.ஆர்.பி ரேட்டிங் தான். என்னதான் செய்தாலும் உயராத டி.ஆர்.பி ரேட்டிங்கை விஜய் படம் ஒளிபரப்பி உயர்த்திக் கொள்ள சேனல் நிர்வாகம் முடிவு செய்ததாம். அதனால் ஒரே நாளில் இத்தனை விஜய் படங்களை ஒளிபரப்பி அதிரடி காட்ட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...