Latest News :

தமிழக அரசு புதிய பலம் தந்துள்ளது - நடிகர் கரண்
Monday July-17 2017

தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2009 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் கரண் தேர்வாகியுள்ளார். ‘மலையன்’ படத்திற்காக கரணுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது குறித்து கூறிய கரண், “ஒரு நடிகருக்கு  விருது என்பது பல படிகள் ஏறிச் சென்று உயர்ந்த உணர்வைத் தரும். அந்த வகையில் மலையன் படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைத்து இருக்கிறது . அந்தப் படத்தில்  நடிக்கும் போது சிரமப் பட்டுப் பல சவால்களைச் சந்தித்து நடித்தேன். அந்த வலி நினைவுகள்  எல்லாம் விருது என்கிற மகிழ்ச்சி மூலம் காணாமல் போய் விட்டது . இப்போது புத்துணர்வும் புது பலமும் பெற்றுள்ளதாக உணர்கிறேன்.  அந்தப் படத்துக்காக என்னை சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள  தமிழக அரசு க்கு என்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த  விருதுக்கு என்னைப்  பரிந்துரை செய்தவர்களுக்கும்   விருது தேர்வுக்குழுவினருக்கும் என் நன்றி. இவ்விருதுக்கு காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநருக்கும் மனமார்ந்த நன்றிகள். இவ்விருதை படத்தில் பணிபுரிந்த அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.” என்றார்.

Related News

48

நான் இங்கு நிற்க விஜயகாந்த் தான் காரணம் - ‘எல்.எஸ்.எஸ்’ பட இயக்குநர் உருக்கம்
Monday February-16 2026

ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...

குழந்தைகளின் கற்றலுக்கான ‘கலர் பென்சில்’! - 'கிகி & கொகொ' பட தயாரிப்பாளர்களின் புதிய முயற்சி
Monday February-16 2026

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...

விவசாயிகளின் உரிமையை பேசும் ’அரிசி’ நிச்சயம் வெல்லும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Monday February-16 2026

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி...

Recent Gallery