‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்று இரண்டு அடல்டு காமெடி படங்களை எடுத்து சர்ச்சையில் சிக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இவரது இவ்விரண்டு படங்களும் நல்லாவே கல்லா கட்டினாலும், எதிர்ப்பையும் அதிகமாகவே சம்பாதித்தது.
ஒரு வழியாக ஆர்யாவை வைத்து ‘கஜினி’ என்ற யு சான்றிதழ் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமார், அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாததால், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒரு விபரீதமான முடிவை செயல்படுத்தாமல், அரவிந்த்சாமியை ஹீரோவாக வைத்து அவர் ஒரு படத்திற்கு சமீபத்தில் பூஜை போட்டார். இதனால், இருட்டு அறை போன்ற முரட்டு படங்களை சந்தோஷ் கைவிட்டுவிட்டு சகஜமான படங்கள் மீது ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டார் என்று மொத்த கோலிவுட்டே நிம்மதி பெருமூச்சுகிட்டது.
இந்த நிலையில், 49 வயதாகும் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக 16 வயது முதல் 18 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரை ஜோடியாக இயக்குநர் சந்தோஷ் தேடி வருவது அனைவரையும அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், அரவிந்த்சாமி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க 16 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவிகள் தேவை என்றும், நடிக்க விருப்பம் உள்ளவர்க்ள் மேக்கப் போடாத தங்களது புகைப்படங்களை அனுப்ப வேண்டும், என்று தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் இந்த விபரீதமான அறிவிப்பால், இந்த படமும் அவரது பாணியிலான முரட்டுத்தனமான படமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...