Latest News :

கீர்த்தி சுரேஷ் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டாரா? - மேனகா விளக்கம்
Friday May-10 2019

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தியில் ஒரு படம் நடித்து வருகிறார். இதற்காக சில நாட்களாக மும்பையில் முகாமிட்டுள்ள அவர் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் பா.ஜ.க-வில் இணைந்தது குறித்து அவர் அம்மாவும் நடிகையுமான மேனகா, அளித்த விளக்கத்தில், “என் கணவர் சுரேஷ் பா.ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போதுவரை எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கீர்த்தியும் இந்த வி‌ஷயத்தில் என்னை மாதிரிதான்.

 

கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன். பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும், என்று கேட்டார்கள்.

 

சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன். பா.ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த செய்திதான் நடிகை மேனகாவும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார், என்ற அர்த்தத்தில் வெளியாகி இருக்கிறது.

 

Actress Menaka

 

கொஞ்சம் ஓவராக போய் ‘கீர்த்தியும் பா.ஜனதாவுல சேர்ந்துட்டாங்களாமே’ என்றுகூட விசாரித்திருக்கிறார்கள். ஒரு வி‌ஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். எனக்கோ என் மகளுக்கோ அரசியல்ல ஈடுபடணும் என்ற எண்ணம் எல்லாம் இப்போதுவரை இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

4814

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

Recent Gallery