Latest News :

’100’ கதை என்னை கட்டிபோட்டுவிட்டது - இசையமைப்பாளர் சாம் சி.எஸ்
Friday May-10 2019

அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ள இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இசையமைத்திருக்கும் ‘100’ இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதரவா, ஹன்சிகா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரிலேயே இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பாராட்டப்பட்டார்.

 

இந்த நிலையில், ‘100’ படத்திற்கு இசையமைத்த அனுபவம் பற்றி சாம் சி.எஸ் கூறுகையில், ”என் இசையை பற்றி பலர் சொல்லும் நல்ல கருத்துக்களை கேட்க எப்போதுமே நன்றாக இருக்கும், குறிப்பாக எனது பின்னணி இசையை பற்றி. ஆனால் உண்மையில், மிகச்சிறந்த இசையை வழங்கும் அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் படங்கள் எனக்கு அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. "100" படத்தை பொறுத்தவரை, நான் 'அடங்க மறு' படத்துக்கு பிறகு ஒரு இசையமைக்கும் ஒரு போலீஸ் படம், ஆனால் முற்றிலும் ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் இருக்கும் படம். இயக்குனர் எனக்கு கதை சொல்லும் போதே, அந்த படத்தில் இசையில் புதுமையாக ஏதாவது முயற்சி செய்ய வாய்ப்பு இருக்குமா? என்பதை நான் எளிதாக கணித்து விடுவேன். ஆனால், சாம் ஆண்டன் கதை சொல்லும்போது என்னை அப்படியே கட்டிப் போட்டு விட்டார். அடுத்து என்ன அடுத்து என்ன என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. இப்போது எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் முழு படத்தை பார்த்து திருப்தி அடைந்தது எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுக்கிறது.

 

Atharva in 100

 

’அடங்க மறு’ என்ற மாபெரும் வெற்றி பெற்ற ஒரு போலீஸ் படத்தில் நான் முன்பே வேலை செய்திருந்தாலும், "100" அதன் கதை சொல்லலிலும், களத்திலும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். இது ஒரு போலீஸ்காரனின் உடல் வலிமையை மட்டும் பெரிதாகக் காட்டும் ஒரு படம் அல்ல, அத்தோடு அவனது புத்திசாலித்தனமான செயல்களை  பற்றிய விஷயங்களும் உண்டு. அதன்படி, இசையில் அது புதுமையை கோரியது, ரசிகர்கள் பின்னணி இசையை ஏற்கனவே கேட்டது போல உணரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். சாம் ஆண்டன் தொடர்ந்து 'திரில்லர்' படங்களை செய்ய நான் அவரை வலியுறுத்துகிறேன், அவர் அதை செய்வார் என நம்புகிறேன். இது அவருக்கு ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும்" என்றார்.

Related News

4816

பிரபலங்களின் சுவாரஸ்ய தகவல்களோடு உருவாகியுள்ள ஆர்.எம்.வீரப்பன் பற்றிய ஆவணப்படம்!
Wednesday December-24 2025

தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

Recent Gallery