தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கும், அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதற்குள் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொண்டு பிரியாகிவிட வேண்டும் என்று நயன் முடிவு செய்திருக்கும் நிலையில், அவரது காதலர் விக்னேஷ் சிவன், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய கூடாது, என்று அவருக்கு தடை போட்டிருக்கிறாராம்.
அதாவது, யார் கூட வேண்டுமானாலும் நடிக்கலாம், ஆனால் சிம்பு கூட மட்டும் நடிக்க கூடாது, என்பது தான் அந்த தடையாம்.
சிம்பு - நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு நீண்ட ஆண்டுகளாக இருவரும் பேசாமல் இருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள். அப்படத்திற்கு பிறகு இருவரும் எப்போதும் போல நட்பாக பேசி வரும் நிலையில், சிம்பு தனது புது படத்தில் நயனை ஹீரோயினாக்க முயற்சி செய்தார். இது தொடர்பாக நயனிடமும் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதனை அறிந்த விக்னேஷ் சிவன், சிம்புவுடன் நடிக்க கூடாது, என்று நயனுக்கு தடை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...