சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பல நடிகைகள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டை’, ‘வெடி’, ‘நடுநிசி நாய்கள்’ என பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் சமீரா ரெட்டி, தன்னை இயக்குநர்களும், நடிகர்களும் பல முறை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள் என்று பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்ததோடு, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். மேலும், ஒரு குழந்தையை பெற்றெடுத்த அவர் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டில் ஒன்றில், “சினிமாவில் எப்போதும் பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவுகிறது. நான் சினிமாவில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பதை அறிய ஒருவர் கூட விரும்பவில்லை. அப்போது தான் தெரிந்தது அனைவரும் ஒரே மாதிரிதான் என்று.
என்னை இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பல முறை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட சிலர் என்னை படுக்கைக்கு அழைத்தது அதிர்ச்சியளித்தது.” என்று தெரிவித்துள்ளார்.
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...