தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் நாசர், செயலாளராக இருக்கும் விஷால் மற்றும் பொருளாளராக இருக்கும் கார்த்தி ஆகியோரது பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
நாளை சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க உள்ளனர். அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்காக தேதி மற்றும் இடத்தை தேர்தல் அதிகாரி அறிவிப்பார். மேலும், ஓட்டு போட தகுதி உடையவர்களின் பட்டியலும் வெளியிடப்படும்.
நாசர் தலைமையிலான அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் செயலாளர் மற்றும் கார்த்தி பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், விஷாலுக்கு எதிராக ராதிகா தலைமையில் புதிய கூட்டணி களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. ராதிகாவின் கூட்டணியில் சிம்பு, எஸ்.வி.சேகர், உதயா ஆகியோரும் முக்கிய பொருப்புகளுக்கு போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...