”இப்படிப்பட்ட வேடங்களில் எப்படி நடிப்பேன்?” - வேதனையில் சோனியா அகர்வால்
Tuesday May-14 2019

‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால், தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மதுரை’, ‘திருட்டுப்பயலே’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து பிஸியாக இருந்த நேரத்தில் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட அவர், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

மீண்டும் நடிக்க வந்திருக்கும் சோனியா அகர்வாலுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பவர், இது குறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், ”தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறேன். சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்று இருந்தேன். அங்கு ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் சினிமாத்துறையினர் என்னை ஒரு மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர். சிலர் என்னை மும்பைக்கே திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றனர்.

 

எனக்கு இப்போது 36 வயது ஆகிறது. ஒரு பையனுக்கோ சிறுமிக்கோ அம்மாவாக நடிக்க நான் தயார். ஆனால் இயக்குனர்கள் என்னை என் வயதுள்ள ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கேட்கிறார்கள். இது என்னை எரிச்சலாக்குகிறது.” என்று கூறி தனது வேதனைனை வெளிப்படுத்தியுள்ளார்.

Related News

4848

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery