Latest News :

கடனை அடைக்க காரை விற்ற நடிகர் விதார்த்!
Saturday September-09 2017

‘மைனா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விதார்த், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், அவரது பல படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் வாய்ப்புகள் குறைந்ததால் சொந்தமாக அவரே படம் தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

 

அதன்படி, விதார்த் தயாரித்த முதல் படம் தான் ‘குற்றமே தண்டனை’. ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கிய இப்படம் மிக குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படமாகவும், பத்திரிகைகள் பாராட்டும் படமாக இருந்தாலும், வியாபார ரீதீயாக இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், விதார்த்துக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டது. இதனால் கடன் காரராண விதார்த், தன்னிடம் இருந்த சில சொத்துக்களை விற்று கடனை அடைத்து வந்தார்.

 

இந்த நிலையில், தன்னிடம் இருந்த காரை கூட விற்று கடனை அடைத்திருக்கும் விதார்த், இப்போது தான் புது கார் ஒன்றை வாங்க இருக்கிறாராம்.

 

விதார்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘குரங்கு பொம்மை’ ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம், நேற்று பல புதிய படங்கள் வெளியாவதால், நல்லா ஓடிக்கொண்டிருந்த விதார்த்தின் ‘குரங்கு பொம்மை’ படத்தை சில தியேட்டர்களில் இருந்து தூக்கியிருப்பது ‘குரங்கு பொம்மை’ படக்குழுவினரை பெரும் கவலை அடையச் செய்துள்ளது.

Related News

485

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery