நடிகர் சங்க தேர்தல் - நாசர் தலைமையிலான அணி மீண்டும் போட்டி
Wednesday May-15 2019

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதில் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.

 

தற்போது இவர்களது பதவிக்காலம் முடிவடைந்ததால் விரைவில் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 

இதுகுறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், அஜய்ரத்னம், சரவணன், மோகன், உதயா, ஜூனியர் பாலையா, டி.பி.கஜேந்திரன், ஸ்ரீமன், குட்டி பத்மினி, சங்கீதா, லலிதகுமாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசர், “ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முறைப்படி அலுவலகத்தை இன்று (புதன்கிழமை) அவரிடம் ஒப்படைப்போம். தேர்தல் நடத்துவதற்கான 3 இடங்களை நாங்கள் பரிந்துரை செய்வோம். அதில் ஒரு இடத்தை நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்து தேர்தலை நடத்துவார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியல் மாவட்ட பதிவாளரிடம் வழங்கப்படும். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும்.” என்றார்.

 

அதே சமயம், நாசர் தலைமையிலான அணியை எதிர்த்து நடிகை ராதிகா தலைமையில் புதிய அணி ஒன்று போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

4854

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery