தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வந்த டாப்ஸி, சரியான படங்கள் அமையாமல் தடுமாற்றி வந்த நிலையில், பாலிவுட் சினிமா அவரை சரியாக பயன்படுத்தி வருவதால், அங்கேயே தனது முழு ஈடுபாட்டையும் டாப்ஸி காண்பித்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் கிளாமர் நடிகையாக வலம் வந்த டாப்ஸி, பாலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோயினாகவும், அதிரடி நாயகியாகவும் வலம் வருகிறார். அவர் நடிக்கும் இந்திப் படங்கள் சீரியஸாக இருப்பதோடு, வரவேற்பும் பெறுகிறது.
இந்த நிலையில், இந்தி இளம் நடிகர் விக்கி கோஷலை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட டாப்ஸியிடம், சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இந்த நடிகர்களில் யாரை திருமணம் செய்ய ஆசை என கேட்டுள்ளனர். அதற்கு டாப்ஸி நடிகர் விக்கி கோஷலை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
டாப்ஸியும், விக்கி கோஷலும் ‘மன்மரிஸியான்’ என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...