முன்னணி ஹீரோவுக்கு மனைவியாகும் நயன்தாரா!
Wednesday May-15 2019

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த நிலையில், ‘விஸ்வாசம்’ வெற்றியை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

தற்போது ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, ‘தளபதி 63’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படங்களை தொடர்ந்து சூர்யாவின் 39 வது படத்திலும் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

சிவா இயக்கும் இப்படத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் பணிபுரிந்த அனைவரும் மீண்டும் இணைகிறார்கள். அந்த வகையில், நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் சிவா விரும்ப, அதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

 

Surya 39

 

‘விஸ்வாசம்’ படத்தைப் போல குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யாவுக்கு மனைவியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

நிஜ வாழ்க்கையில் அவர் எப்போது மனைவியாக போகிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, அவரோ சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து மனைவி வேடங்களில் நடித்து வருகிறார்.

Related News

4858

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery