பழம்பெரும் கன்னட நடிகர் சுதர்சன், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.
கன்னட சினிமாவின் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட நடிகர் சுதர்ஷன், உடல் நிலைக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ஹீரோவாக மட்டும் இன்றி குணச்சித்திரம், வில்லன் என பல வேடங்களில் நடித்துள்ள சுதர்ஷன், கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினிகாந்துடன் பாயும் புலி, வேலைக்காரன் ஆகிய படங்களிலும், கமல்ஹாசனுடன் புன்னகை மன்னன், நாயகன் உள்ளிட்ட பல ப்டாங்களில் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘விஜயநாகராதா வீரபுத்ரா‘ விருது சுதர்ஷனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
சினிமா குடும்ப பின்னணி கொண்ட சுதர்ஷனின் தந்தை நரேந்திர ராவ், கன்னட திரைப்பட வர்த்தகக்குழு தலைவராக இருந்து உள்ளார். இதேபோல் இவரது சகோதரர் ஜெயகோபால் பிரபல கன்னட சினிமா கதை ஆசிரியராகவும், மற்றொரு சகோதரர் கிருஷ்ண பிரசாத் சினிமா பிரபலமாகவும் உள்ளனர். மறைந்த கன்னட நடிகர் சுதர்ஷனுக்கு சைலாஸ்ரீ என்ற மனைவியும், அருண் குமார் என்ற மகனும் உள்ளனர்.
சுதர்ஷன் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...