Latest News :

பிரபல பின்னணி பாடகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல இயக்குநர்
Wednesday May-15 2019

சினிமாவில் நடிகைகளுக்கு தான் பாலியல் தொல்லை என்றால், மற்ற துறைகளிலும் பாலியல் தொல்லை குறித்து புகார்கள் வர தொடங்கியுள்ளது. பிரபல பாடகி சின்மயிக்கு தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறிய புகார் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகியாக இருக்கும் பிரணவி, தனக்கு பிரபல இயக்குநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.

 

’ஸ்ரீ ராமதாசு’, ‘ஹேப்பி டேஸ்’, ‘லயன்’, ‘எமதொங்கா’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பாடி புகழ் பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குநர் ரகு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரணவி, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியிருக்கிறார். அதில், தான் சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு தேடிய போது தனக்கு பலர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்திருக்கும் பிரணவி, அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், ”நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குநர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். ஸ்டுடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றதும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆபாசமாகவும் பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் புகார்களால் கொதித்தெழுந்த தெலுங்கு திரையுலகம், தற்போது பாடகி பிரணவியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு எப்படி ரியாக்ட் பண்ண போகிறார்களோ.

Related News

4860

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery