Latest News :

’தர்பார்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு தரப்பு!
Wednesday May-15 2019

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையே, படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் படக்குழு சற்று அப்செட்டானார்கள். இருப்பினும், அதனை சரி செய்து படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.

 

இந்த நிலையில், இன்றுடன் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மே மாதம் 29 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு எங்கு நடைபெறும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

Related News

4866

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery