நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ஏழை எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதோடு, ஆதற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நீட் தேர்வினால் தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காசோலையை லாரன்ஸின் உதவியாளர் அனிதா குடும்பத்தாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அனிதா குடும்பத்தாருக்கு தான் உதவி செய்வது யாருக்கும் தெரியக் கூடாது என்று லாரன்ஸ் கேட்டுக் கொண்டதால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...