தமிழ் சினிமாவில் இளம் நடன இயக்குநர்களில் ஒருவரான பரத் என்பவர் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றிய பரத், சென்னை விருகம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி வருகிறார். ‘மின்சார கனவுகள்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடன இயக்குநர் பரத், இன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரின் மரண செய்தி அவரது நண்பர்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியை அளித்துள்ளது.
35 வயதாகும் பரத், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...