Latest News :

சஞ்சீவ், ஆல்யா மானசாவுக்கு வந்த புது சிக்கல்! - திருமணத்திற்கு முன்பு தீருமா?
Friday May-17 2019

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் - ஆல்யா ஜோடி, தற்போது நிஜ காதல் ஜோடிகளாக வலம் வருகிறார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், சஞ்சீவ் புது சிக்கலில் சிக்க, இதனால் ஆல்யாவும் கவனலையில் மூக்ழியிருக்கிறார்.

 

அதாவது, நடிகர் சஞ்சீவுக்கு சிறு வயது முதலே ‘அல்டோஃபோபியா’ என்ற பிரச்சினை இருக்கிறதாம். உயரத்தைக் கண்டு பயப்படும் ஒரு மன வியாதியாம் இது. இதனால், சிறு வயது முதலே மாடி படி ஏறுவது, லிப்ட்டில் பயணிப்பது என்று அனைத்திற்கும் சஞ்சீவ் பயப்படுவாராம். இதனால், ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்வதை கூட தவிர்த்து வந்தாராம்.

 

சினிமாவுக்குள் நுழைந்ததும், இதனால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டவர் எப்படியோ அதை சமாளித்து விட்டாலும், தற்போது ‘ராஜா ராணி’ சீரியலில் வசமாக சிக்கிக்கொண்டதோடு, இயக்குநரிடம் திட்டும் வாங்கியிருக்கிறார்.

 

’ராஜா ராணி’ ஷுட்டிங் சிங்கப்பூர்ல நடக்கும் போது, தீம் பார்க் ஒன்றில் படப்பிடிப்பு நடந்ததாம். அப்போது சஞ்சீவும், ஆல்யாவும் உயரத்தில் இருந்து குதிப்பது போன்ற காட்சியாம். ஆனால், பயத்தில் அந்த காட்சியில் நடிக்க மறுத்த சஞ்சீவ், தன்னைப் பற்றி மறைந்த உண்மையையும் இயக்குநரிடம் கூறினாராம். உடனே டென்ஷனான இயக்குநர், “இந்தப் பிரச்னையையெல்லாம் சரி செஞ்சுட்டுல்ல நீங்க நடிக்க வந்திருக்கணும்” என்று அனைவரும் முன்பும் திட்ட, சஞ்சீவுக்கு அவமானமாகிவிட்டதாம்.

 

இதை பார்த்த ஆல்யா, சஞ்சீவுக்கு ஆறுதல் சொன்னதோடு, அவரது பிரச்சினையை தீர்க்க பலரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மேலும், இதுபோன்ற மன நோயால் பாதிக்கப்பட்டு பிறகு மீண்டவர்களிடமும் பேசினாராம். அவர்கள் சஞ்சீவுக்கு ஆலோசனை வழங்க ஓகே சொல்லியிருக்கிறார்களாம்.

 

திருமணம் ஆக இன்னும் ஒரு வருடம் இருக்க, அதற்குள் சஞ்சீவின் பிரச்சினையை தீர்த்துவிடுவேன், என்ற நம்பிக்கையோடு ஆல்யா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாராம்.

Related News

4875

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery