மருமகனுக்காக மாமியார் செய்த விஷயம்! - மகிழ்ச்சியில் ஆர்யா
Friday May-17 2019

நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார்கள். ‘கஜினி’ படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ‘காப்பான்’ படத்தில் மீண்டும் இணைந்த போது இவர்களது காதல் பெரிய அளவில் வளர்ந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.

 

ஆனால், திருமணத்தில் சாயிஷாவின் குடும்பத்தாருக்கு விருப்பம் இல்லை என்றும், சாயீஷாவின் பிடிவாதத்தினாலேயே அவர்கள் சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. இதை உண்மை என்று நிரூபிக்கும் விதத்தில் சாயீஷாவின் தயார் ஷஹீனும், ”ஆர்யா - சாயீஷா திருமணம் காதல் திருமணம் அல்ல, இரு வீட்டாரும் பேசி நிச்சயம் செய்யப்பட்ட திருமணம், என் மகள் ஆர்யாவை காதலிக்கவில்லை” என்று பேட்டிக் கொடுத்தார்.

 

பிறகு ஒரு வழியாக ஆர்யா - சாயீஷா திருமணம் முடிந்து இருவரும் ஹனிமூனுக்கும் சென்று வந்துவிட்டார்கள். தற்போது இருவரும் சேர்ந்து ’டெடி’ என்ற படத்திலும் நடிக்க உள்ளனர்.

 

இந்த நிலையில், ஆர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘மகாமுனி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பலர் ஆர்யாவுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

 

ஆர்யாவின் மனைவி சாயீஷா கூட இப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் மட்டும் அல்ல, அவரது அம்மா, அதாவது ஆர்யாவின் மாமியாரான ஷஹீனும், ”மகாமுனி படத்திற்காக ஆர்யா கடுமையாக உழைத்ததை பார்த்துள்ளேன். அந்த படத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன்” என்று பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 

தனக்காக மாமியார் வெளியிட்டிருக்கும் பதிவை பார்த்த ஆர்யா ரொம்பவே மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Related News

4877

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery