சிம்பு என்றாலே வம்பு, என்ற நடிகர் எஸ்.டி.ஆர் குறித்து பலர் விமர்சித்து வந்த நிலையில், மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த விமர்சனத்தை மாற்றும் வகையில் சிம்பு நடந்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதாலும் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். எப்போதும் சர்ச்சைகள் மூலம் பிஸியாக இருந்தவர், தற்போது படப்பிடிப்புகளில் பிஸியானதால், அவரை வைத்து படம் தயாரிக்க விரும்பிய இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் கூட மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, முழு திரைக்கதையை தன்னிடம் காட்டினால் தான் படப்பிடிப்புக்கு செல்ல முடியும், என்று தயாரிப்பாளர் கூற, அதற்கு வெங்கட் பிரபு, “அந்த பழக்கம் தனக்கு இல்லை” என்று கூற, படம் டிராப்பாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
ஆனால், அதை மறுத்த படத்தின் தயாரிப்பாளர் விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம், டிராப் என்பது வெறும் வதந்தி தான், என்று விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
என்ன பிரச்சினை என்று இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றாலும், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இப்படி தள்ளி போவது, சிம்பு ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...