கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘கூடல் நகர்’ திரைப்பட்ம் மூலம் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி, 2010 ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
அப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்த சில படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், நடுவில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தாலும், ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றிக்கனியை எட்டிப்பிடித்த விஜய் சேதுபதி, தொடர்ந்து அக்கனியை சுவைத்துக் கொண்டே இருக்கிறார்.
ரூ.15 கோடி வரை விஜய் சேதுபதிக்கு சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கும் அளவுக்கு அவர் நடிக்கும் படங்களுக்கு மவுசு கூடியிருப்பதோடு, கோடம்பாக்கத்தில் அவரது மவுசும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே விஜய் சேதுபதியிடம் கதை சொல்ல அல்லது வேறு சில விஷயங்கள் குறித்து அவரிடம் பேச வேண்டும் என்றால் அதற்கு சுலபமான சில வழிகளில் சீனு ராம்சாமியும் ஒருவர். தற்போது விஜய் சேதுபதியின் தூதுவர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் சேதுபதியின் நம்பிக்கைக்குரியவராக அவர் உள்ளார்.
யாருக்காவது ஏதாவது உதவி செய்ய வேண்டி இருந்தால் கூட, அதை இயக்குநர் சீனு ராமசாமி மூலமாக செய்யும் விஜய் சேதுபதி, தன்னை சினிமாவில் ஹீரோவாக்கியதற்காக அவருக்கு இத்தகைய மரியாதை கொடுத்து வருகிறாரம்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...