விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ‘கர்ணன்’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும், தனது மகன் துருவை ஹீரோவாக்குவதிலும் விக்ரம் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே, துருவ் ஹீரோவாக நடித்த முதல் படமான ‘வர்மா’ படத்தை பால இயக்கி முடித்த நிலையில், படம் சரியில்லை என்று கூறி, தயாரிப்பாளர் குப்பையில் போட்டுவிட்டு, வேறு ஒரு இயக்குநரை வைத்து முதலில் இருந்து படத்தை எடுத்து வந்தார்கள். ‘ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் பாலா நடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தின் காட்சிகள் எதுவும், தற்போது உருவாகியுள்ள ‘ஆதித்ய வர்மா’ படத்தில் இருக்க கூடாது, என்பதற்காகவே இயக்குநர் பாலா விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம்.
‘ஆதித்ய வர்மா’ படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கினாலும், நடிகர் விக்ரமும் படப்பிடிப்பு தளத்தில் இருந்துக் கொண்டு தனது யோசனைகளை கூறி வருவதகாவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...