அப்பாவாகப் போகும் ஆர்யா? - சாயீஷா போட்ட சந்தோஷ ட்வீட்
Monday May-20 2019

நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று சாயீஷா கூறிய நிலையில், திருமணத்திற்குப் பிறகு ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் ‘டெட்டி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

தற்போது ‘மகாமுனி’ படத்தை முடித்திருக்கும் ஆர்யா, அடுத்ததாக ‘டெட்டி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

 

இந்த நிலையில், சாயீஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. காரணம், சாயீஷா வெளியிட்ட புகைப்படம் ஒன்று.

 

சமீபத்தில் நண்பர்களுடன் படம் பார்க்க ஆர்யாவு, சாயீஷாவும் சென்றார்கள். அந்த புகைப்படத்தை சாயீஷா சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், அப்புகைப்படத்துடன் You + me= ❤️😍😘👰 என்று பதிவு செய்தார்.

 

ஸ்மைலியில் குழந்தையின் உருவம் உள்ளது, இதனாலேயே அவர் கர்ப்பமாக உள்ளாரா என்ற கேள்வி 

 

ரசிகர்கள் இடையே எழுந்த நிலையில், தற்போது அது செய்தியாக பரவிக் கொண்டிருக்கிறது.

 

ஆனால், சாயீஷா தற்போது படங்கள் நடிப்பதால் அவர் கர்ப்பமாக இருக்க மாட்டார் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

 

 

Related News

4899

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery