முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது மறைவுக்குப் பிறகு தமிழ் நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள். கமல் மற்றும் ரஜினி நேரடி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், விஷால் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது அரசியல் ஆசையை அவ்வபோது வெளிக்காட்டி வருகிறார்கள்.
முன்னணி நடிகரான விஜயும் தனது அரசியல் பிரவேசத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகளில் மறைமுகமாக தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட, அரசியல் குறித்து பேசாத அஜித்தை கூட அவ்வபோது அரசியல் வட்டத்திற்குள் இழுத்து விடுகிறார்கள்.
இந்த நிலையில், விஜய், அஜித் இருவரில் யாருக்கு அரசியல் செட்டாகும், என்பது குறித்து இருவர்களையும் வைத்து ஹிட் படம் இயக்கிய இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டதற்கு, “அரசியலை பொருத்தவரை அவர்களது எண்ணம் என்ன என்று தெரியாமல் நான் கருத்து கூற முடியாது. ஆனால், இருவருமே எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் வல்லமை படைத்தவர்கள் தான். அவர்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். அதை வைத்து சொல்கிறேன், இருவரும் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும், அதை சரியாக செய்து அதில் வெற்றி பெறுவார்கள். ஆனால், அரசியலை பொருத்தவரை அவர்கள் பெற்ற வெற்றியை அரசியல் மூலமாகவா அல்லது அறக்கட்டளை மூலமாகவா, எப்படி ரசிகர்களுக்கு திருப்பி கொடுப்பார்கள் என்பது, அவர்களுக்கு தான் தெரியும்.” என்றார்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...