மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் டிவி நிகழ்ச்சிகளில் நம்பர் ஒன் இடத்தில் ‘பிக் பாஸ்’ இருக்கிறது. இதன் இரண்டு பாகங்களும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், விரைவில் மூன்றாம் பாகமான ‘பிக் பாஸ் - சீசன் 3’ ஒளிபரப்பாக உள்ளது.
கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 3-யின் புரோமோ வீடியோ வெளியான நிலையில் தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பிக் பஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் நிகழ்ச்சி குறித்து விஜய் டிவி நிர்வாகத்திற்கு கோரிக்கை ஒன்றை சமூகவலைதளம் மூலம் வைத்தார்கள். அதாவது, நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக, ”விஜய் டிவியை சார்ந்தவர்களை தேர்வு செய்ய வேண்டாம், தாங்க முடியல” என்பது தான் அந்த கோரிக்கை.
ஆனால், ரசிகர்களின் இந்த கோரிக்கையை நிராகரிக்கும் வகையில், பிக் பாஸ் சீசன் 3-யின் முதல் போட்டியாளராக ஜாங்கிரி மதுமிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் நடிகையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தங்களது கோரிக்கையை நிராகரித்து, தங்களது ஆட்களையே களம் இறக்கும் விஜய் டிவி மீது கடுப்பாகியுள்ள ரசிகர்கள், இந்த முறை நிகழ்ச்சி மொக்கையாக இருந்தால் நிச்சயம் பார்க்க மாட்டோம், என்று வெளிப்படையாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...