பைக் ரேஸில் ஏற்பட்ட விபத்துகளாலும், படப்பிடிப்புகளில் ஏற்பட்ட விபத்துகளாலும் பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்துக் கொண்ட நடிகர் அஜித்துக்கு, ‘விவேகம்’ படப்பிடிப்பிலும் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயத்தின் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து படத்தை அஜித் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தாலும், படம் என்னவோ அவரது உழைப்புக்கு நிகராண வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது காயங்களின் வலியை பொறுத்துக் கொண்ட அஜித்துக்கு, கடந்த சில நாட்களாக தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது உடனடியாக தோள் பட்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அறுவை சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...