விஜய் ஆண்டனியின் நடிப்பில், சசி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இப்படத்திற்கு பிறகு கலையரனுசன் ‘எய்தவன்’, கயல் சந்திரனுடன் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்தவருக்கு மேலும் பல படங்கள் வாய்ப்பு வந்தது.
இதற்கிடையே, ‘பிச்சைக்காரன்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் என்பருக்கும், சாட்னா டைட்டஸுக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு சாட்னாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கார்த்திக்கை திருமணம் செய்துக் கொண்டதோடு, நடிப்புக்கும் முழுக்கு போட்டார்.
அதே சமயம், சாட்னா டைட்டஸின் அம்மா, தனது மகளை கார்த்திக் ஏமாற்றி, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துக் கொண்டார். இதனால் மகளின் சினிமா வாழ்க்கை சீரழிந்து விட்டதாக, புலம்பினார்.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட சாட்னா டைட்டஸ் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாக இருக்கும், 'பிக் பிரதர்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க சாட்னா கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை 'பிரெண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', ஆகிய படங்களை இயக்கிய சித்திக் இயக்குகிறார்.
திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த சாட்னா, தற்போது நடிக்க வந்திருப்பதும், அதுவும் மலையாளப் படத்தில் நடிப்பதாலும், அவரது திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டிருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர். அதேபோல், அவரது கணவர் கார்த்திக் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பிறகு ஒரு சில படங்களை விநியோகம் செய்ததோடு, வேறு எந்த ஒரு திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...