’காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சார்மி கவுர், அதன் பிறகு ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அப்படங்கள் வெற்றி பெறாததால், அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றவருக்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், அங்கே முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.
செக்ஸ் பாம் என்ற பட்டப் பெயருடன் தனது கவர்ச்சியால் தெலுங்கு சினிமாவையே கிரங்கடித்த சார்மிக்கு தற்போது தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், சார்மி நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துவிட்டார். இனி தான் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்து விட்டார்.
பொதுவாக நடிகைகள் திருமணத்திற்காக தான் நடிப்புக்கு முழுக்கு போடுவார்கள் என்பதால், சார்மியும் திருமணத்திற்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அதையும் மறுத்தவர், கல்யாணமும் வேண்டாம், நடிப்பும் வேண்டாம், என்று தெரிவித்திருக்கிறார். அதே சமயம், ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் தொடர்ந்து இருக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
திரிஷா பிறந்தநாளான்று அவருக்கு வாழ்த்து கூறிய சார்மி, அவரை திருமணம் செய்துக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...