‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ராவ், பல இந்தி படங்களில் நடித்திருப்பவர், தற்போது தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அதிதி ராவ் இளம் வயதிலேயே தான் பட்ட பல கஷ்ட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியவர், தான் 5ம் வகுப்பு படிக்கும்போதே தனக்கு சீனியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்ததாகவும், அதை அவர் பெருமையாக தனது வீட்டில் காட்டினாராம். மேலும், இளம் வயதிலேயே காதலிக்க தொடங்கியவர், பிரபல இந்தி நடிகர் ஒருவரை 21 வயதில் திருமணம் செய்துக் கொண்டாராம். பிறகு அவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த அதிதி ராவ், அவரை விவாகரத்து செய்துவிட்டாராம். விவாகரத்துக்கு பிறகு தான் அதிதி ராவுக்கு திருமணம் நடந்ததே பலருக்கு தெரியுமாம்.
கணவரை விவாகரத்து செய்த அதிதி ராவ், அதன் பிறகு தான் சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டினாராம். மேலும், தற்போது தனக்கு காதல், திருமணம் ஆகியவற்றியில் ஈடுபாடில்லை என்று கூறியவர், அனைத்து மொழிப் படங்களிலும் நடிப்பதில் தான் முழு கவனமும் இருக்கிறது, என்றும் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...