தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரேயா, ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர், கடைசியாக சிம்புவுக்கு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு இடங்களிலும் அவருக்கு வாய்ப்பு குறைந்ததால், அம்மா வேடங்களிலும் நடிக்க முடிவு செய்தவருக்கு அப்போதும் சரியான வாய்ப்பு அமையவில்லை. இதற்கிடையே, தனது ரஷ்ய நாட்டு காதலரை திடீர் திருமணம் செய்துக்கொண்ட ஸ்ரேஷா, தற்போது ரஷ்யாவின் செட்டிலாகிவிட்டார்.
திருமணத்திற்குப் பிறகு வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறியவருக்கு சில தெலுங்குப் படங்களின் வாய்ப்புகள் கிடைத்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
விமல் ஹீரோவாக நடிக்கும் ‘சண்டைக்காரி’ என்ற படத்தில் ஸ்ரேயா தான் ஹீரோயின். ஆர்.மாதேஷ் இயக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...