கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது புரமோஷன் வீடியோ ஒளிபரப்பாகி வரும் நிலையில், போட்டியாளர்களின் பெயர்களும் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே, காமெடி நடிகை மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பது உறுதியான நிலையில், அடுத்த போட்டியாளராக ‘90 எம்.எல்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீ கோபிகா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா நடித்த முதல் படமான ‘90 எம்.எல்.’ மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. ஓவியா உள்ளிட்ட படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ஐந்து பெண்களும், மது குடிப்பது, ஆபாசமாக பேசுவது என்று படம் முழுவதுமே ச்சீ...என்று சொல்வது போலவே நடித்திருந்ததால், படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், 90 எம்.எல் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ கோபிகா பிக் பாஸில் போட்டியாளராக வருவது அந்நிகழ்ச்சிக்கு கூடுதல் பகம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...