Latest News :

‘களவாணி 2’ படத்தில் நான் நடிக்கவில்லை - விமல் அதிரடி அறிவிப்பு!
Saturday September-09 2017

சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விமல், தொடர்ந்து சில வெற்றிப் படங்களில் நடித்து வந்தாலும், கடந்த சில வருடங்களாக அவரது படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், சில ஆண்டுகள் சத்தமில்லாமல் சைலண்டாக இருக்கும் விமல், மூன்று படங்களை சொந்தமாக தயாரித்து அதில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

அந்த மூன்று படங்களில் முதலாவதாக வெளியாக இருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. இப்படத்தை பல வெற்றி படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து இன்னும் தலைப்பு வைக்காத ஒரு படத்திலும், ‘களவாணி 2’ படத்திலும் நடிக்க உள்ளதாக விமல் சமீபத்தில் அறிவித்திருந்தார். சற்குணம் இயக்கும் இப்படத்தை விமலே சொந்தமாக தயாரிக்கிறார்.

 

இந்த நிலையில், ‘களவாணி 2’ படத்தில் தான் நடிக்கவில்லை, என்று விமல் அறிவித்திருக்கிறார். ஆனால், இது விமல் தயாரித்த களவாணி 2 அல்ல, நசீர் என்பவர் தயாரிப்பதாக கூறும் படமாகும்.

 

களவாணி படத்தை தயாரித்து நஷீர் என்பவர், நேற்று முன் தினம் செலி மூவிஸ் சார்பில் ‘களவாணி 2’ படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அதில் விமல் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும். படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகம் செய்தி வெளியாகியிருந்தது.

 

இந்த செய்தியை மறுத்துள்ள நடிகர் விமல், ”செர்லி மூவீஸ் நஷீருடன் எந்த தருணத்திலும், எந்தவித ஒப்பந்தமும் நான் செய்து கொள்ளவில்லை. அவருடையை தயாரிப்பில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எனவே இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

492

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery