இளம் நாயகனுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்த அஞ்சலி!
Thursday May-23 2019

குடும்ப பிரச்சினை, காதல் விவகாரம் என்று அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை அஞ்சலி, தற்போது இளம் நாயகன் ஒருவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

’ஏமாலி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சாம் ஜோன்ஸ், தற்போது ‘தர்மபிரபு’, ‘லிசா 3டி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். லிசாவில் அஞ்சலி ஜோடியாக நடித்திருக்கிறார். தர்ம பிரபு படத்தில் ஜனனி ஐயர் ஜோடியாக நடித்திருக்கிறார்.

 

தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட சாம் ஜோன்ஸ், ”லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த போதே சினிமா ஆர்வம் என்னை படிக்க விடாமல் செய்தது. எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையுடனே கல்லூரி படிப்பை முடித்தேன். ஏமாலி படத்தின் மூலம் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்.

 

முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.

 

Actor Sam Jones

 

பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார். தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். தர்மபிரபுவில் எமலோகத்தில் யோகி பாபுவும், பூலோகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம். தர்மபிரபு ஜீன் மாதம் திரைக்கு வர உள்ளது வித்தியாசமான நகைச்சுவை திரைப்படம் அது.

 

நான் சின்ன பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்தது  இரண்டு முன்னணி இயக்குநர்களுடன்  நல்ல கதையம்சம் கொண்ட படத்தில்  நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.

 

Lisa 3D

 

விஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டெர்டெய்னராகவும் விளங்கவேண்டும் என்பதே என் ஆசை.” என்று கூறுகிறார்.

Related News

4922

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery