ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்த ‘கஜினிகாந்த்’ படத்தின் மூலம் காதலர்களான ஆர்யா - சாயீஷா ஜோடி, தற்போது தம்பதிகளாக நடிக்கும் முதல் படத்தையும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவே தயாரிக்கிறார்.
’டெடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘நாணயம்’, ‘மிருதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்குகிறார்.
‘ராஜா ரங்கூஸ்கி’, ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்க, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார்.
இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது.
ஆர்யா - சாயீஷா ஜோடி திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருப்பதோடு, கூடுதல் பலமாக சதீஷ், கருணாகரன் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...
அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...