தென்னிந்தியாவின் முதல் ஹீரோ! - விஜய்க்கு கிடைத்த புது பெருமை
Thursday May-23 2019

இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமா தான் என்ற நிலையை தற்போது தென்னிந்திய சினிமாக்கள் மாற்றியுள்ளது. பாலிவுட் சினிமாக்களுக்கு நிகரான பிரம்மாண்டமாக மட்டும் இன்றி, நல்ல கதையம்சம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல படங்கள் தொடர்ந்து வெளியாவதும் ஒரு காரணம்.

 

இதற்கிடையே, தென்னிந்திய திரைப்படங்களை கவனமாக பார்த்து வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலர், அப்படங்களை இந்தியில் ரீமேக் செய்வதிலும் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமீபத்டில் கூட, ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படத்தை அக்‌ஷய் குமார் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், தென்னிந்தியாவின் டாப் வசூல் ஹீரோக்கள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரூ.500 கோடியை வசூல் செய்த முதல் தென்னிந்திய ஹீரோ, ரூ.250 கோடியை அதிகம் முறை வசூலித்த ஹீரோ என்ற தலைப்பில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

 

அந்த வகையில், ‘பாகுபலி’ படம் மூலம் ரூ.500 கோடி வசூலை தாண்டிய ஓரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பிரபாஸ் பெறுகிறார். வேறு எந்த தென்னிந்திய நடிகர்களின் படமும் ரூ.500 கோடியை வசூலிக்கவில்லை.

 

Actor Prabhas

 

அதே போல் ரூ.250 கோடி வசூலை தொடர்ந்து இரண்டு முறை கடந்த ஒரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றிருக்கிறார். ரஜினியின் ‘2.0’ படம் இந்த அளவுக்கு வசூலித்திருந்தாலும், ரஜினியின் அதற்கு முந்தைய படமான ‘காலா’ ரூ.160 கோடி மட்டுமே வசூலித்ததால், ரஜினிக்கு கூட இந்த பெருமை கிடைக்கவில்லை.

Related News

4931

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery