’தளபதி 63’ பஸ்ட் லுக்! - வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு
Friday May-24 2019

விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியின் மூன்றாவது படமாக உருவாகும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அருகே உள்ள படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்குகளில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் டெல்லியிலும் நடைபெற உள்ளது.

 

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும், பஸ்ட் லுக் எப்படி இருக்கும், என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், படக்குழுவில் உள்ள பாடலாசிரியர் விவேக், ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்படும் தேதியை சூசகமாக அறிவித்துள்ளார். அதாவது, இன்றில் இருந்து இன்னும் 30 நாட்களில் தளபதியின் 63 வது படத்தின் பஸ்ட் லுக் வெளியாகும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

ஆக, மொத்தம் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Related News

4933

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery