Latest News :

காஜல் அகர்வால் மூலம் கசிந்த ‘இந்தியன் 2’ பட ரகசியம்
Friday May-24 2019

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படம் பல்வேறு பஞ்சாயத்துக்களுக்கு பிறகு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. முதலில் இப்படத்தை தயாரிக்க இருந்த லைகா நிறுவனத்திடம் இருந்து விலகி வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் கூட்டணி வைக்க இயக்குநர் ஷங்கர் முயற்சித்தார்.

 

ஆனால், லைகா நிறுவனம் போட்ட கடிவாளத்தால் ஷங்கரால் வேறு எங்குமே பார்க்க முடியாமல் போனது. இதையடுத்து, லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திற்காகவும் ‘இந்தியன் 2’ வை இயக்க முடியாது என்பதை புறிந்துக்கொண்ட ஷங்கர், அவர்களிடம் அடிபணிந்தார்.

 

இந்த நிலையில், ’இந்தியன் 2’ வில் ஹீரோயினாக நடிக்கும் காஜல் அகர்வால், வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், படம் குறித்த ரகசியத்தை உடைத்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியாக்கியுள்ளது.

 

அதாவது, காஜல் அகர்வாலிடம் ‘இந்தியன் 2’ படக்குழு ஜூன் 1 ஆம் தேதி முதல் கால்ஷீட் வாங்கியுள்ளதாம். தற்போது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ள நிலையில், ஜூன் 1 ஆம் தேதி காஜல் அகர்வால் இடம்பெறும் காட்சிகளை படமாக்கிய ஆக வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பு தரப்பு உள்ளதால், கமலின் தேதிகளின் விபரங்களை கூறும்படி கேட்டுள்ளதாம்.

 

Indian 2

 

இதனால், அவசர அவசரமாக பிக் பாஸ் பணிகளை முடித்துக்கொண்டு எப்படியும் ஜூன் 1 ஆம் தேதி கால்ஷீட் கொடுக்க கமல் தயாராகி வருகிறாராம்.

 

ஏற்கனவே, தேதி குளறுபடியாகும் என்ற பயத்தில் தான் நயன்தாரா, இப்படத்தில் இருந்து விலகிய நிலையில், காஜல் அகர்வால் கொடுத்திருக்கும் தேதிகளை படக்குழுவால் பயன்படுத்த முடியவில்லை என்றால், அதற்கும் ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டு விடுமோ என்றும் பயப்படுகிறார்களாம்.

Related News

4935

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

யோகி பாபு படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!
Monday August-11 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம் (P...

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ...

Recent Gallery